ETV Bharat / state

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு 9ஆம் தேதி சலூன் கடைகள் அடைத்து போராட்டம் - கொலை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் சலூன் கடைகள் அடைத்து போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் அறிவித்துள்ளது.

barbarshop
barbarshop
author img

By

Published : Oct 5, 2020, 10:14 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்த தம்பதியரின் 12 வயது மகளை, அவர்களின் எதிர் வீட்டிலிருந்த கிருபானந்தம் (19) என்ற இளைஞன், அவனது நண்பர்கள் டார்வின் சிங், ஜெயப்ரகாஷ் ஆகியோர் சென்ற வருடம் ஏப்ரல் மாதம் 16ஆம் கும்பல் பாலியல் வன்புணர்வு செய்து, சிறுமியின் மூக்கில் மின் கம்பியை திணித்து கொலை செய்தனர்.

இக்கொலை தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த வடமதுரை காவல் துறையினர் விசாரணை நடத்தி கிருபானந்தத்தை மட்டும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் ஓராண்டாக நடந்து வந்தது. வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் வழங்கப்பட்டது.

அதில் குற்றஞ்சாட்டப்பட்ட கிருபானந்தத்தின் குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி மகளிர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. தீர்ப்பைக் கேட்டவுடன் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நீதிமன்ற வாயிலிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜன் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்:

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கின்றது. தமிழ்நாடு அரசு இவ்வழக்கில் மேல் முறையீடு செய்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வழி செய்ய வேண்டும்.

இதனை வலியுறுத்தி வரும் 9ஆம் தேதி தமிழ்நாடு முழுவதுமுள்ள 3.5 லட்சம் சலூன் கடைகளை அடைத்து அறப்போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி, முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க : 'நடிகர் தற்கொலைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை பாஜக அரசு ஹத்ராஸ் இளம்பெண்ணுக்கு கொடுக்கவில்லை' - குஷ்பூ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.