ETV Bharat / state

ஒட்டன்சத்திரத்தில் 25 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் - Election Flying Corps

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே ஏடிஎம் மையத்தில் நிரப்புவதற்கு உரிய ஆவணமின்றி எடுத்த வரபட்ட 25 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

ஒட்டன்சத்திரத்தில் ரூ.25 லட்சம் பணம் பறிமுதல்  தேர்தல் பறக்கும் படையினர்  பணம் பறிமுதல்  திண்டுக்கல் பணம் பறிமுதல்  Rs 25 lakh confiscated in Oddanchatram  Election Flying Corps  money confiscated in Dindigul
Rs 25 lakh confiscated in Oddanchatram
author img

By

Published : Mar 30, 2021, 1:01 PM IST

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தொப்பம்பட்டி பேருந்து நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக தாராபுரத்தில் இருந்து தொப்பம்பட்டியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப கொண்டு வந்த வாகனத்தை அலுவலர்கள் சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 25 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

அதேபோல், உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள சாமிநாதபுரம் சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனத் தணிக்கையில், இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி முருகானந்தம் என்பவர் கொண்டுவந்த 52 ஆயிரத்து 720 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

இரு இடங்களிலும் கைப்பற்றப்பட்ட 25 இலட்சத்து 52 ஆயிரத்து 720 ரூபாய் பணமானது. ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் சசியிடம் ஒப்படைக்கப்பட்டு கருவூலத்தில் வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: ’இரண்டு கட்சிகளும் ஊழல், லஞ்சம் எனக் குற்றம் சாட்டுகிறது’ - பாரிவேந்தர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.