திண்டுக்கல்: பிரசித்திப் பெற்ற பழனி மலை முருகன் கோயிலுக்குச் செல்வதற்கு படிப்பாதை, மின்இழுவை ரயில், ரோப்கார் ஆகியவை மூலம் செல்லலாம். ரோப்கார் மூலம் விரைவாகவும், எளிதாகவும் இரண்டு நிமிடங்களில் சென்றுவரலாம். முதியோர், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தச் சேவை பயனுள்ளதாக உள்ளது.
ரோப்கார் சேவை தினமும் ஒரு மணி நேரம், மாதம் ஒருநாள், ஆண்டிற்கு ஒரு மாதம் எனப் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த மாதம் வருடாந்திரப் பராமரிப்புப் பணிக்காக ரோப்கார் நிறுத்திவைக்கப்பட்டது.
இந்தப் பணிகள் முடிவுற்று கடந்த இரண்டு நாள்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு இன்று (செப். 8) மீண்டும் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முன்னதாக ரோப்கார் நிலையத்தில் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாள்களுக்கு பிறகு ரோப்கார் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: சசிகலாவின் ரூ.100 கோடி மதிப்பிலான பையனூர் பங்களா முடக்கம்!