ETV Bharat / state

திண்டுக்கல் கோட்டை குளத்தில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை - fire department

திண்டுக்கல் கோட்டை குளத்தில் தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர் பருவமழை கால முன்னேற்பாடுகள் தொடர்பான ஒத்திகையை நிகழ்த்திக் காட்டினர்.

திண்டுக்கல் கோட்டை குளத்தில் தீயணைப்புத்துறையினர் ஒத்திகை

author img

By

Published : Jul 20, 2021, 11:37 AM IST

திண்டுக்கல்: பருவமழை காலங்களில் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்கும். அப்போது, நீர்நிலைகளில் சிக்கிக் கொள்பவர்களை மீட்பது, மழைக்கால மீட்புப் பணிகளில் ஈடுபடுவது தொடர்பாக திண்டுக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சார்பில் நேற்று (ஜூலை 19) கோட்டை குளத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

திண்டுக்கல் கோட்டை குளத்தில் தீயணைப்புத்துறையினர் ஒத்திகை

இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் விசாகன் தொடங்கிவைத்தார். மழை காலங்களில் மின் சாதனங்களால் ஏற்படும் ஆபத்துக்கள், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தப்பிப்பது, இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது போன்றவற்றை செய்முறை மூலம் ஒத்திகை காட்டினர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக செய்து காட்டப்பட்டது எனத் தெரிவித்தனர்.

மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கட்ரமணன், உதவி தீயணைப்பு அலுவலர் சுரேஷ் கண்ணா, நிலைய அலுவலர் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: காவிரி நதி நீர் விவகாரம் - போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.