ETV Bharat / state

கிராமிய இசையுடன் ’நாட்டார் தெய்வ' வழிபாட்டை நினைவூட்டும் புரவி எடுப்பு விழா! - karupanna samy vizhla

திண்டுக்கல் : நத்தம் அருகே கிராம தெய்வ வழிபாடான புரவி எடுப்பு விழா நடைப்பெற்றது. அங்குள்ள காவல் தெய்வமான 'மேட்டுக்கருப்பு' சுவாமிக்கு கிராமிய இசை நிகழ்ச்சி நடத்தி சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

புரவி வழிப்பாடு
author img

By

Published : Aug 18, 2019, 4:56 AM IST

நத்தம் அருகே சாணார்பட்டி மேட்டுக்கருப்பண் சுவாமி கோயிலில் ஆடி மாத உற்சவ விழா நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இதன் முக்கிய நிகழ்ச்சியான புரவி எடுப்பதற்காக கருப்பண சுவாமி, குதிரை, யானை,காளை உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட சிலைகள் தயாரிக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்தது.

நாட்டார் தெய்வ' வழிப்பாடு
விழாவின் தொடக்கமாக ஆகஸ்ட் 16ஆம் தேதி இரவு கிராமிய இசை நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்து சந்தனக் குடம் எடுத்து சுவாமி கண் திறப்பு நிகழ்ச்சி , சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
சாணார்பட்டி பேருந்து நிலையம் அருகே இருந்து புரவி கிளம்பி வீர சின்னம்பட்டி ரோடு, முஸ்லிம் தெரு, மாரியம்மன் கோயில் வழியே ஊர்வலமாக மேட்டுக்கருப்பன் சுவாமி கோயிலுக்கு சென்றடைந்தது. இதில் கோபால்பட்டி, ஆவிளிப்பட்டி, செட்டிநாயக்கன்பட்டி, மேட்டுக்கடை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Intro:திண்டுக்கல் 17.08.19

நத்தம் அருகே புரவி எடுப்பு விழாBody:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாணார்பட்டியில் நடந்த கோயில் திருவிழாவில் புரவி எடுப்பு விழா வெகுவிமர்சையாக நடந்தது.

சாணார்பட்டி மேட்டுக்கருப்பண சுவாமி கோயில் ஆண்டு ஆடி மாத உற்சவ விழா நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இதன் முக்கிய நிகழ்ச்சியான புரவி எடுப்பதற்காக கருப்பண சுவாமி, குதிரை, யானை,காளை உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட சிலைகள் தயாரிக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்தது.
விழாவின் துவக்கமாக நேற்று இரவு கிராமிய இசை நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்து சந்தனக்குடம் எடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து சுவாமி கண் திறப்பு மற்றும் சிறப்பு அபிஷேக,ஆராதனை நடந்தது. மாலை சாணார்பட்டி பேருந்து நிலையம் அருகே இருந்து புரவி கிளம்பி வீர சின்னம்பட்டி ரோடு, முஸ்லிம்தெரு, மாரியம்மன் கோயில் வழியாக 300க்கும் அதிகமான சிலைகள் ஊர்வலமாக மேட்டுக்கருப்பண சுவாமி கோயிலுக்கு சென்றடைந்தது. இதில் கோபால்பட்டி, ஆவிளிப்பட்டி, செட்டிநாயக்கன்பட்டி, மேட்டுக்கடை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்று சென்றனர்.
Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.