திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் வடகவுஞ்சி கிராமம் அமைந்துள்ளது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியின் தரத்தினையும், மாணவ மாணவிகளின் கல்வி தரத்தினையும் உயர்த்த வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சுசிந்திரன் பள்ளிக்கு பீரோ, நாற்காலிகள் , தலைவர்கள் புகைப்படம், குடம் , மேஜை உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்களைஊர்வலமாக எடுத்து வந்து பள்ளிக்குச் சீராக வழங்கினர்.
இதில் பள்ளி ஆசிரியர்கள் உட்பட ஊர்பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி தானாகவே முன்வந்து அரசுப் பள்ளிக்கு பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை ஊர் மக்கள் வழங்கிய சம்பவம் கேட்போர் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.