ETV Bharat / state

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறைப் பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டுயானை - மக்கள் பீதி - Dindugule Distirct News

ஒற்றையாக வலம் வரும் யானையால் கொடைக்கானல் பேத்துப்பாறைப் பகுதி மக்கள் தங்களின் வீடுகளுக்குள்ளேயே அச்சத்துடன் சிக்கியுள்ளனர்.

பேத்துப்பாறை பகுதியில் உலா வரும் ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சம்.
ஒற்றையாக வலம் வரும் யானை
author img

By

Published : Oct 14, 2021, 6:24 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானலில் நகர்ப்பகுதிகள் மட்டுமின்றி, கிராமப் பகுதிகள் உள்ளிட்டப் பல்வேறு இடங்களில், வன விலங்குகளின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் கொடைக்கானலைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில், வரும் வன விலங்குகளால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி வந்தனர்.

ஒற்றையாக வலம் வரும் யானையால் கொடைக்கானல் பேத்துப்பாறைப் பகுதி மக்கள் தங்களின் வீடுகளுக்குள்ளே அச்சத்துடன் சிக்கியுள்ளனர்.

வன விலங்குகளான காட்டெருமை, மான், பன்றி, சிறுத்தை, யானை, உள்ளிட்ட விலங்குகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் விவசாயிகளை அச்சுறுத்துவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

மேலும் கொடைக்கானல் அருகே பேத்துப்பாறைப் பகுதியில் இருக்கும் குடியிருப்புப் பகுதியின் அருகே வனப்பகுதியிலிருந்து ஒற்றை காட்டு யானை ஒன்று உலா வருகிறது.

இதுகுறித்தான காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

கூட்டமாக இருக்கும் யானைகளைவிட இதுபோன்று தனியாக இருக்கும் யானை ஏற்படுத்தும் சேதங்கள் தான் அதிகமானவை. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர்.

இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, வனத்துறையினர் யானைகளை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: சாம்பார் சரியில்லை - கர்நாடகாவில் தாய், சகோதரி சுட்டுக்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.