ETV Bharat / state

கொடைக்கானலில் பூத்து குலுங்கும் ப்ரூனஸ் மலர்கள்! ரம்மிய அழகை ரசிக்க திரளும் சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானலில் பூத்து குலுங்கும் ப்ரூனஸ் மலர்களை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இளஞ் சிவப்பு வர்ணத்தில் பூத்து குலுங்கும் ப்ரூனஸ் மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது.

இரண்டாம் சீசனை வரவேற்று நிற்கிறது இளஞ்சிவப்பு ப்ரூனஸ் மலர்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 12:10 PM IST

Updated : Sep 26, 2023, 12:24 PM IST

Kodaikanal Flower Blossoms

திண்டுக்கல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் முதல் கட்ட சீசன் கடந்த ஏப்ரல் மதம் துவங்கி மே, ஜூன் மாதங்களில் நிறைவடைந்தது. கொடைகானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது சுற்றுலாவை அனுபவித்து மகிழ்வர். மேலும் இயற்கையாக அமைந்துள்ள இடங்களுக்கு சென்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தும் மகிழ்வர்.

இதையும் படிங்க: Chennai Airport : சென்னை விமான நிலையத்தில் புது கட்டுபாடு - வாகன ஓட்டிகளே உஷார்!

இந்த நிலையில் செப்டம்பர், அக்டோபர் மாதம் இரண்டாம் கட்ட சீசன் தொடங்கி உள்ளது. இதை வரவேற்கும் விதமாக பூக்க துவங்கி உள்ள ப்ரூனஸ் மலர்கள் டிசம்பர் வரை நீடிக்கும் என சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். தற்பொழுது கொடைக்கானல் மலை முழுவதும் இளம் சிவப்பு நிறத்தில் பூத்துள்ள ப்ரூனஸ் மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமைந்து உள்ளது.

இந்த இளம் சிவப்பு ப்ரூனஸ் மலர்களை காண சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொடைக்கானலுக்கு வரும் சில சுற்றுலா பயணிகள் இந்த வகை மலர்களின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

இதையும் படிங்க: Sathanur Dam : வேகமாக நிரம்பும் சாத்தனூர் அணை! தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Last Updated : Sep 26, 2023, 12:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.