திண்டுக்கல்லில் சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை பராமரிப்பைத் தனியாருக்குத் தாரை வார்க்கக்கூடாது, 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக மாற்ற வேண்டும், ஆபத்து மற்றும் விபத்து படி 10 சதவீதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் வருகிற டிசம்பர் 3ஆம் தேதி கிண்டியில் உள்ள முதன்மை இயக்குநர் அலுவலகம் முன்பாக மனுக்கொடுக்கும் போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவித்தனர்.
தொடர்ந்து அகில இந்திய அளவில் மாநில அரசு ஊழியர் சம்மேளம் சார்பாக வருகிற நவம்பர் 26ஆம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தத்தில் அனைத்து சாலைப் பணியாளர்களும் பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் அம்சராஜ், மாநில இணைச்செயலாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
'சாலை பராமரிப்புப் பணியை தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது' - சாலை பராமரிப்புப் பணி
திண்டுக்கல்: சாலை பராமரிப்புப் பணியை தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கண்டித்து வருகிற டிசம்பர் 3ஆம் தேதி முதன்மை இயக்குநர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறைச் சாலை பணியாளர்கள் சங்கத்தினர் சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.