தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5ஆயிரத்து 849 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் ஆயிரத்து 171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 3ஆயிரத்து 144 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 86ஆயிரத்து 492ஆக உள்ளது. சென்னையை போன்று மற்ற மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுள்ள நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யும் சோதனை எடுக்கப்படுகிறது. இதில், நோய்த்தொற்று உறுதியாகும் நபர்கள் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் துறை தெரிவித்துள்ள அறிவுரையின் படி, அரசு தலைமை மருத்துவமனை தவிர்த்து பிற தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் புனித வளனார் மருத்துவமனை, சிட்டி மருத்துவமனை, ராஜராஜேஸ்வரி மருத்துவமனை, ஷிபா மருத்துவமனை, லியோனார்டு மருத்துவமனை (வத்தலக்குண்டு), கிறிஸ்டியன் பெலோஷிப் மருத்துவமனை(அம்பிளிக்கை), கிறிஸ்டியன் பெலோஷிப் மருத்துவமனை(ஒட்டன்சத்திரம்), வேல் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை(பழனி) ஆகிய மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்று தொடர்பான மருத்துவ உதவிகளை பெறலாம் எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஒரு லைட், ஒரு ஃபேன்: ரூ.1.25 லட்சம் கரண்ட் பில்; அதிர்ந்துபோன பெண்மணி!