திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமம் அமைந்துள்ளது. இந்தக்க் கிராமத்திற்குத் தனியார் பேருந்து ஒன்று இயக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் பூம்பாறைப் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேல் என்பவர், சொந்த வேலை காரணமாக கொடைக்கானல் பகுதிக்கு வந்து, இருசக்கர வாகனம் மூலம் மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது எதிரே வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த குழந்தவேலை மீட்ட அருகிலிருந்தவர்கள், கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைவேலு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கொடைக்கானல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: அடையாளம் தெரியாத நபர் அடித்துக் கொலை: போலீசார் விசாரணை!