திண்டுக்கல்: கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து இன்று 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் வெயிலின் தாக்கத்தைக் குறைப்பதற்காக பொதுமக்கள் குளிர்பானங்கள், இளநீர், மோர், கரும்பு ஜூஸ் மற்றும் நுங்கு போன்ற உணவுகளை அதிகமாக வாங்கி உண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தாகத்தை தணிக்கக் கூடிய குடிநீரை அருந்துவதற்காக இயற்கையான சத்துகளைத் தரக்கூடிய மண் பானைகளில் தண்ணீரை ஊற்றி, அதனை பயன்படுத்தி வருவார்கள். இதற்கிடையே திண்டுக்கல்லில் தற்போது மண்பாண்ட கடைகளில் குழாய் பொருத்தப்பட்ட பிரத்யேக மண்பானைகள் தண்ணீர் ஊற்றி பயன்படுத்துவதற்காக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மண்பானைகள் ரூபாய் 250 முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்தைக் குறைப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் மண்பானை பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: Video: மயங்கி விழுந்த மனநலம் பாதித்த பெண்.. தாயுள்ளத்துடன் உதவிய பெண் போலீஸ்!