திண்டுக்கல்: வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் தனது மனைவி, மூன்று குழந்தைகளை தாக்கிக் கொண்டிருப்பதாக வேடசந்தூர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மனைவியை அடித்துக் கொண்டிருந்த நபரை மீட்டு விசாரித்தனர்.
அப்போது, அந்த நபர் சரவணன் (36) என்பதும், அவரது மனைவி செல்வி என்பதும், அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள், வேடசந்தூர் அருகே லவுகனம்பட்டி பகுதியில் ஒரு தோட்டத்தில் வாடகை வீட்டில் வசித்து வருவதும் தெரியவந்தது.
குடி போதைக்கு அடிமையான சரவணன், பணம் கேட்டு மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. உடனே காவல் துறையினர், செல்வி மற்றும் மூன்று குழந்தைகளை பேருந்தில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், குடிபோதையில் அட்ராசிட்டி செய்த சரவணனை குண்டுக்கட்டாக தூக்கி ஆம்னி வேனில் ஏற்றிச்சென்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் காதலால் 5 மாத கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்