திண்டுக்கல்: சீவல் சரகு ஊராட்சி நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரின் மகள் சின்னாளப்பட்டி தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை மாலை முதல் காணவில்லை. இதையடுத்து அப்பகுதியிலுள்ள இந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தனது மகளைக் கடத்தியதாக செம்பட்டி காவல் நிலையத்திற்குப் புகார் கொடுக்க சென்றார்.
அதற்கு அங்கிருந்த காவல் துறையினர், பெண்ணை காணவில்லை என்பதை மட்டும் புகார் கொடுக்குமாறு கூறியதாகத் தெரிகிறது. இதனால், நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பரமசிவத்தின் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரும் செம்பட்டி காவல் நிலையத்தில் திரண்டனர். இதனையடுத்து செம்பட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமாரிடம் தங்களது பெண்ணை பற்றி விசாரித்த போது தேடிக் கொண்டிருக்கிறோம் என பதில் அளித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் நிலைய கதவைத் தள்ளிக் கொண்டு தகராறு ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும், தங்களது பெண் கிடைக்கும் வரை தாங்கள் காவல் நிலையத்தை விட்டு வெளியேற மாட்டோம் எனக் காவல் நிலைய வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவலர்கள் - பெண்ணின் உறவினர்கள் இடையே தகராறு ஏற்படும் சூழல் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு.. ஐஏஎஸ், முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு..