ETV Bharat / state

பாலக்காடு - திருச்செந்தூர் ரயிலில் துப்பாக்கியுடன் திரிந்த 4 கேரள இளைஞர்கள்.. போலீசார் விசாரணை! - four youths threatened passengers with dummy gun

பாலக்காடு - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு பயணிகளை அச்சுறுத்திய நான்கு கேரள இளைஞர்களை ரயில்வே காவல் துறையினர் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 7:12 PM IST

ரயிலில் துப்பாக்கியுடன் திரிந்த 4 கேரள இளைஞர்கள்

திண்டுக்கல்: பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் நோக்கி இன்று காலை பாலக்காடு - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் பயணம் செய்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கையில் துப்பாக்கியுடன் இருந்துள்ளனர். அந்த நான்கு இளைஞர்களும், துப்பாக்கியை ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி கையில் வைத்து சுடுவது போல் பாவனை காட்டுவதும், சினிமாவில் வருவது போல் துப்பாக்கியை பாகங்களாக பிரித்து புல்லட் நிரப்பி திரும்பவும் அதை சரி செய்து சுடுவது போல் பாவனை காட்டுவதுமாக இருந்துள்ளனர்.

இதனைக் கண்ட சக பயணிகள், உடனடியாக உதவி மையத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதனைத் தொடர்ந்து கொடைரோடு ரயில் நிலையத்தில் ரயில் வரும் பாதையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும், அந்த இளைஞர்கள் பயணம் செய்த அந்தப் பெட்டியை காவல் துறையினர் சுற்றி வளைத்து நான்கு பேரையும் மடக்கிப் பிடித்து, அவர்களிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அந்த துப்பாக்கியை சோதனை செய்ததில், அது டம்மி துப்பாக்கி என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர்கள் எதற்காக துப்பாக்கியை கையில் வைத்திருந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அமீன்ஷெரீப்(19),கண்ணூரைச் சேர்ந்த அப்துல் ராசிக்(24), பாலக்காட்டைச் சேர்ந்த ஜப்பல்ஷா(18),மற்றும் காசர்கோட்டைச் சேர்ந்த முகமது சின்னான்(20) என்பதும் அவர்கள் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் சென்ற ரயிலில் மதுரை வரை சென்று மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவிற்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு காவல் துறை, ரயில்வே காவல் துறை மற்றும் உளவுத்துறை ஆகியோர் இளைஞர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ஏர்வாடியில் உள்ள உறவினர் ஒருவரின் மகனுக்கு சிறுவனுக்கு துப்பாக்கி வாங்கிச் சென்றததாக தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் நான்கு பேரும் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து, அவர்கள் நான்கு பேர் மீதும் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது மற்றும் டம்மி துப்பாக்கி வைத்து பயணிகள் மிரட்டுவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இளம்பெண்ணை வீட்டில் பூட்டிவைத்து 4 பேர் பாலியல் வன்கொடுமை.. புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.