திண்டுக்கல்: பழனி அருகே சண்முகம்பாறைப் பகுதியில் உள்ள கணவாய் மேட்டுப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் வருமானம் இன்றித் தவித்து வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுடன் பழனி காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவசக்தி, பழனி நகர காவல் ஆய்வாளர் உதயகுமார், பழனி வனத்துறை அலுவலர் தலைமையிலான காவல் துறையினர் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினர்.
மலைவாழ் மக்களுக்கு இனிப்புகள், புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டன. வனத்துறை மற்றும் காவல் துறை அலுவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சென்று பொருட்களை வழங்கியதால் மலைவாழ் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு