கொடைக்கானல் நகர் பகுதிகளில் நாயுடுபுரம், செண்பகனூர், கீழ்பூமி, பாம்பே சோலா, பாம்பார்புரம், அப்சர்வேட்டரி, டிப்போ உள்ளிட்ட பல்வேறு இடங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில், இங்கு சாலையோரங்களில் குப்பைக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் போன்ற குப்பைகள் கொட்டப்படுகிறது.
குப்பைக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதுடன், இதனை உண்ணும் விலங்குகளும் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளாகிறது. காற்றடிக்கும் நேரங்களில் குப்பைகள் சாலை முழுவதும் பறக்கிறது. இதனால் அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
அதேபோல், சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளால் நோய்த் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே குப்பைகளை சரியான முறைகளில் ஒழுங்குப்படுத்த, சாலை ஓரங்களில் குப்பைத் தொட்டிகளை வைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்காக குப்பையை சேகரிக்கும் பொறியாளர்!