ETV Bharat / state

பழனி கோயில் உதவி ஆணையர் தரக்குறைவாக பேசுவதாக மிராஸ் பண்டாரங்கள் புகார்!

பழனி முருகன் கோயிலில் மிராஸ் பண்டாரங்களை தரக்குறைவாக ஒருமையில் உதவி ஆணையர் லட்சுமி பேசுவதாக கூறி, பணிகளை புறக்கணித்து உதவி ஆணையருக்கு எதிராக திருக்கோயில் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பழனி
Palani
author img

By

Published : Aug 11, 2023, 8:20 AM IST

உதவி ஆனையர் தரகுறைவாக போசுவதாக மிராஸ் பண்டாரங்கள் மனு

திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர். பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு தினமும் ஆறு கால பூஜைகளும், தினசரி பூஜைகளும், திருமஞ்சன கைங்கரியும் தினமும் நடைபெற்று வருகிறது.

இதற்கென மலைக்கோயிலில் 64 திருமஞ்சன பண்டாரங்கள் உள்ளனர். இவர்கள் பழனி அருகே உள்ள வரதமாநதி அணையிலிருந்து வரும் வரட்டாறு புனித நீரை தினந்தோறும் ஆறு கால பூஜைக்கு தீர்த்தங்களாக தலையில் சுமந்து கொண்டு படிப்பாதை வழியாக தினமும் கொண்டு சென்று ஆண்டாண்டு காலமாக அனைத்து அபிஷேகங்களும் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பக்தர்கள் ஆசைப்பட்டு வரும் ஆன்மீக பூமி, திருவண்ணாமலை - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

64 மிராஸ் பண்டாரங்களுக்கு மாத ஊதியம் என்பது கிடையாது. அர்ச்சனை, அபிஷேக, சிரபதட்சணை சீட்டுகளில் பங்கு தொகை மட்டுமே பெறுகிறோம். அதே போல பக்தர்கள் கொண்டு வரும் அர்ச்சனை, அபிஷேக பொருட்களை பெற்று அர்ச்சனை செய்து பிரசாதம் கொடுக்கிறோம். அப்போது பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைகளை மட்டுமே பெற்றுக் கொண்டு வாழ்வாதரம் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், உதவி ஆணையர் லட்சுமி என்பவர், 64 மிராஸ் பண்டாரங்களை கொள்ளை அடிப்பதாகவும், தரக்குறைவாக பேசுவதாகவும், தங்களை வேண்டாம் என்று கூறுவது மட்டுமல்லாமல், ‘வெளியே செல்லுங்கள், நாங்கள் வேறு நபர்களை நியமித்து கொள்கிறோம்’ என்றும் கூறுவதாக அவர்கள் கூறி உள்ளனர்.

மேலும், பண்டாரங்களின் உரிமைகளில் திருக்கோயில் நிர்வாகம் தலையிடக் கூடாது என நீதிமன்றம் தடை ஆணையை தாங்கள் பெற்றுள்ளதால், உதவி ஆணையர் லட்சுமி தரக்குறைவாக பேசுகிறார் என்றும், இதனைக் கண்டித்து இன்று பணிகளை புறக்கணித்து விட்டு திருக்கோயில் அலுவலகத்தில் இணை ஆணையரிடம் மனு கொடுக்க வந்ததாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவத்தால் கோயில் வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: சொல்லொண்ணா துயரத்தை சந்திக்கும் உப்பளத் தொழிலாளர்கள் - செவி சாய்க்குமா தமிழ்நாடு அரசு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.