ETV Bharat / state

' இனியும் அஞ்சுவதற்கில்லை! ' - குடிநீருக்காக திண்டுக்கல்லில் 5ஆவது நாளாகப் போராட்டம்!

திண்டுக்கல்: கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீரின்றி சிரமப்படும் 12 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

Peoples protest for water in dindigul
Peoples protest for water in dindigul
author img

By

Published : Dec 23, 2019, 2:48 PM IST

Updated : Dec 23, 2019, 4:10 PM IST

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனுமந்தராயன்கோட்டை, மயிலாப்பூர், வீரக்கல், புதுப்பட்டி, சாமியார்பட்டி, கும்மம்பட்டி, பொன்மான் துறை, வக்கம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீரின்றி சிரமம் அடைந்து வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணமாக உள்ள நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள மூன்று அடி தடுப்புச்சுவரை குறைக்க வலியுறுத்தி, அனுமந்தராயன்கோட்டை கிராமப் பேருந்து நிலையம் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து நம்மிடையே பேசிய கிராம மக்கள், " கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் இன்றி தவித்து வருகின்றோம். முதலில் மழை இல்லாததன் காரணமாகவே தண்ணீர் வரவில்லை என்று நினைத்திருந்தோம். ஆனால், எங்கள் பகுதிக்கு வர வேண்டிய தண்ணீரை தடுப்பணையின் மூலம் தடுத்து வருகின்றனர். அதனால் எங்களுக்கான தண்ணீர் கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவோம். மேலும் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க உள்ளோம்" என்று கூறினர்.

குடிநீர் கேட்டு அனுமந்தராயன்கோட்டையில் பொதுமக்கள் போராட்டம்

முன்னதாக முதல் இரண்டு நாட்களில் வட்டாட்சியர், டிஆர்ஓ உள்ளிட்ட அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் குடகனாறு பாசனத்துக்குத் தண்ணீர் விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் தேர்தல் முடிந்தவுடன் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் தரப்பில் தெரிவித்திருந்த நிலையில், எழுத்துப்பூர்வமாக வந்த அறிக்கையில் கிராம மக்களின் கோரிக்கையில் மாற்றம் இருந்துள்ளது. இதனால் பொதுமக்கள் ஐந்தாவது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதற்குப் பல அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:

ஆன்லைன் வர்த்தகத்தால் அமுங்கிப்போன வாழ்வாதாரம்

Intro:திண்டுக்கல் 23.12.19

தண்ணீர் வழங்கக்கோரி ஐந்தாவது நாளாக தொடரும் கிராம மக்களின் போராட்டம்.

Body:திண்டுக்கல் மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக உள்ள காமராஜர் நீர்த்தேக்கத்திலிருந்து வரக்கூடிய தண்ணீர் தங்கள் கிராமத்திற்கு வராததன் காரணமாக 12 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனுமந்தராயன்கோட்டை, மயிலாப்பூர், வீரக்கல், புதுப்பட்டி, சாமியார்பட்டி, கும்மம்பட்டி, பொன்மான் துறை, வக்கம்பட்டி, பழைய வக்கம்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீரின்றி மக்கள் சிரமமடைந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக உள்ள நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள 3அடி தடுப்புச்சுவரை குறைக்க வலியுறுத்தி 1000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அனுமந்தராயன்கோட்டை கிராம பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து நம்மிடையே பேசிய கிராம மக்கள், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் பகுதிகளில் தண்ணீர் இன்றி நாங்கள் தவித்து வருகின்றோம். முதலில் மழை இல்லாததன் காரணமாகவே தண்ணீர் வரவில்லை என்று நினைத்திருந்தோம். ஆனால் எங்கள் பகுதிக்கு வர வேண்டிய தண்ணீரை தடுப்பணையின் மூலம் தடுப்பதன் காரணமாக நாங்கள் விலைக்கு தண்ணீர் வாங்கி அன்றாடம் பயன்படுத்தி வருகின்றோம். அதனால் நாங்கள் எங்களுக்கான தண்ணீர் கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவோம். மேலும் வருகின்ற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க உள்ளோம் என்று கூறினர்.

முன்னதாக முதல் இரண்டு நாட்களில் வட்டாச்சியர் மற்றும் டிஆர்ஓ உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதையடுத்து அமைதிப் பேச்சுவார்த்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினருமான இ.பெரியசாமி, கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். குடகனாறு பாசனத்துக்கு தண்ணீர் விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தேர்தல் முடிந்தவுடன் ராஜ வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள தடுப்பு சுவரின் உயரம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதனை எழுத்துப்பூர்வமாக தரும்படி கிராம மக்கள் கூறினர். ஆனால் எழுத்துப்பூர்வமாக வந்த அறிக்கையில் கிராம மக்களின் கோரிக்கையில் மாற்றம் இருந்ததன் காரணமாக போராட்டம் ஐந்தாவது நாளாக தொடர்ந்து வருகிறது. கிராம மக்களின் போராட்டத்திற்கு பல அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Conclusion:
Last Updated : Dec 23, 2019, 4:10 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.