திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனி, மாணிக்கம் பிள்ளை பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து ஐந்து நபர்கள் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த ஐந்து நபர்களுக்ளை பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாள்களாக சம்சுதீன் காலனியில் இரண்டு இடங்களில் வெளி நபர்கள் அங்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் யாரும் வெளியே வராத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், சம்சுதீன் காலனியைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் தாங்கள் வெளியே வரவேண்டும் என பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கே செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை செய்தி எடுக்கக் கூடாது என்றும் அவர்கள் மிரட்டினர். வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை எந்தவித நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: 'ஈரோட்டில் ராட்சத கிருமி நாசினி தெளிக்கும் புகைபோக்கி அறிமுகம்'