திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலின் தலைமை மருத்துவமனையாக அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. நாள்தோறும் இங்கு மலைக்கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைப் பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழி திறந்தவெளி கழிப்பிடமாகவும், குப்பைக்கூளமாகவும் மாறி வருகிறது. குறிப்பாக இரவு வேளைகளில் அரசு மருத்துவமனை வளாகம், மதுப்பிரியர்களின் கூடாரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. தவிர, மருத்துவமனை வளாகத்தில் செல்லும் கழுவுநீர் கால்வாய் முறையாகப் பராமரிக்கப்படாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.
இது மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளுக்கு மேலும் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் என அப்பகுதியினர் அச்சம் தெரிவிக்கின்றனர். உடல் நலத்தை சீர்செய்யும் மருத்துவமனையே சீர்கேடாக இருப்பது அங்கு செல்பவர்களை முகம் சுளிக்கச் செய்வதால், மாவட்ட நிர்வாகம் விரைந்து இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பரப்புரைக்குச் சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் அமமுகவினர் அட்ராசிட்டி