ETV Bharat / state

அமமுக உறுப்பினரின், சாதி பெயரைக் கூறித் தாக்கிய திமுக பிரமுகர்!

திண்டுக்கல்: அமமுக உறுப்பினரை சாதி பெயரைக் கூறி இழிவாகப் பேசி தாக்கிய திமுக ஊராட்சி மன்றத் தலைவரை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

collector office
collector office
author img

By

Published : Jan 21, 2020, 7:53 AM IST

Updated : Jan 21, 2020, 9:12 AM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகள், கடந்த 16ஆம் தேதியன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு நடந்த கலைநிகழ்ச்சியை காண்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த காளிமுத்து என்பவர் தனது மகளை வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார்.

இதனிடையே, அங்கிருந்த திமுக ஊராட்சி மன்றத் தலைவர் ஜோதீஸ்வரன் நிகழ்ச்சி நடக்குமிடத்தில், இடையூறு செய்வதாகக் கூறி காளிமுத்துவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் ஜோதீஸ்வரன் காளிமுத்துவின் வீட்டிற்குச் சென்று, அவரது சாதி பெயரைக் கூறி திட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த காளிமுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

'றெக்கை கட்டி பறக்கும் தமிழ்' - இனி தமிழ் மொழியிலும் விமான அறிவிப்புகள்

இந்நிலையில், இதுகுறித்து கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் காளிமுத்து புகாரளித்தும் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் திமுக ஊராட்சி மன்றத் தலைவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து புகார் மனு அளித்தனர். மேலும், திமுகவினரால் தாக்கப்பட்ட காளிமுத்து அமமுக கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:திண்டுக்கல் 20.1.20

ஜாதி பெயரை கூறி இழிவாகப் பேசி தாக்கிய திமுக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

Body:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக உள்ளார். கடந்த 16ம் தேதி கிராமத்து பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த கலை நிகழ்ச்சிகளை காளிமுத்து மகள் பார்த்துள்ளார். அப்போது அங்கு வந்த காளிமுத்து தனது மகளை வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார்.

இதற்கை அங்கிருந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் ஜோதீஸ்வரன் நிகழ்ச்சி நடக்கும்போது இடையூறு ஏற்படுத்துவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் வீட்டுக்கு சென்ற காளிமுத்துவை திமுக ஊராட்சி மன்ற தலைவர் ஜோதீஸ்வரன் ஜாதி பெயரை கூறி திட்டி தாக்கியதாகவும், காளிமுத்து வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த காளிமுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் காளிமுத்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறி காளிமுத்துவின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் திமுக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வேண்டும் எனக் கோரி மனு அளித்தனர்

Conclusion:
Last Updated : Jan 21, 2020, 9:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.