தமிழ்நாட்டில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை செவன்ரோடு பகுதியில் நடைபெறும் காய்கறி சந்தை, சனிக்கிழமையான இன்று (ஏப்.24) நடந்தது. அரசின் விதிமுறைகளை பின்பற்றியும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தும் பொது மக்கள் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். முகக்கவசம் மற்றும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாதவர்களுக்கு அலுவலர்கள் அபராதம் விதித்து எச்சரித்து வருகின்றனர். காய்கறி சந்தையில் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது.