சீனாவில் தொடங்கி உலக நாடுகள் அனைத்தையும் மிரட்டிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டிவருகிறது. இதன் தாக்கத்தின் காரணமாக தற்பொழுது இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் காவல் துறையினர், சுகாதாரத் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடல் வெப்ப நிலை, நோய்த்தொற்று ஆகியவை குறித்து பரிசோதிக்கின்றனர். மேலும் கிருமிநாசினி கொண்டு பயணிகளின் கைகளைச் சுத்தம் செய்த பின்னரே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தச் சுகாதாரப் பணிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பைச் சீர் செய்ய 20 ஆயிரம் கோடி ரூபாய்! - கேரள அரசு அறிவிப்பு