தமிழ்நாடு கோயில்களில் உள்ள யானைகளுக்கான சிறப்பு நல்வாழ்வு முகாம் ஆண்டுதோறும் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் வனபத்ரகாளியம்மன் கோயில் ஆற்றங்கரையில் நடைபெற்று வருகிறது. 48 நாட்கள் நடைபெறும் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாமில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டியில் உள்ள கோயில்கள், மடங்கள் போன்றவற்றிற்குச் சொந்தமான யானைகள் அழைத்து வரப்படுகின்றன.
இந்த முகாமில் யானைகளுக்கான உடல் பரிசோதனைகள், சத்தான உணவுகள், நடைப் பயிற்சிகள் உள்ளிட்டவைகள் கால்நடை மருத்துவர்களால் வழங்கப்படுகிறது. 54 வயதாகும் பழனி கோயில் யானை கஸ்தூரி யானைகளுக்கான சிறப்பு நல்வாழ்வு முகாமில் கலந்து கொள்ள 13ஆவது முறையாக செல்கிறது.
4 ஆயிரத்து 640 கிலோ கிராம் எடை கொண்ட கஸ்தூரி யானை பழனியில் இருந்து லாரியில் ஏற்றி, மேட்டுப்பாளையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முன்னதாக கோவில் குருக்கள் சிறப்பு பூஜைகள் நடத்தினர். பின்னர் கோவில் ஊழியர்கள், பொதுமக்கள் கஸ்தூரி யானையை வழி அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: மே.வங்கத்தில் ரயில் மோதி 2 யானைகள் உயிரிழப்பு