ETV Bharat / state

பழனி மலைக்கோயில் உண்டியலின் வரவு இவ்வளவா? - பழனி முருகன் கோயில்

பழனி மலைக்கோயில் உண்டியல்கள் 26 நாட்களில் நிறைந்ததால், கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இருநாட்களில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் மொத்த காணிக்கை வரவு ரூபாய் 2.70 கோடியைத் தாண்டியது

பழனி மலைக்கோயில்
பழனி மலைக்கோயில்
author img

By

Published : Sep 23, 2022, 5:43 PM IST

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் தொடர் விடுமுறை மற்றும் ஓணம் திருவிழாவை முன்னிட்டு வந்த பக்தர்கள் கூட்டம் காரணமாக 26 நாட்களில் நிறைந்தது. இதையடுத்து உண்டியல்கள் கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.

இருநாள் எண்ணிக்கையின் மொத்தத்தொகையாக ரொக்கம் இரண்டு கோடியே 71 லட்சத்து 48ஆயிரத்து 290 ரூபாய் கிடைத்துள்ளது. பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளியாலான தாலி, கொலுசு, வேல், காவடி, மோதிரம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

தங்கம் 1,085 கிராமும்; வெள்ளி 15,441 கிராமும்; மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்டப்பல்வேறு வெளிநாட்டு கரன்சிகள் 2,406ம் காணிக்கையாக கிடைத்துள்ளன. தவிர உண்டியலில் பித்தளை, செம்பு வேல்கள், ஏலக்காய், நவதானியங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவையும் காணிக்கையாக கிடைத்துள்ளன.

உண்டியல் எண்ணிக்கையின்போது அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன், சத்யா, பழனிக்கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், மதுரை உதவி ஆணையர் (நகை சரிபார்ப்பு) பொன்.சுவாமிநாதன் உள்ளிட்டப்பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.