ETV Bharat / state

ஜனவரி 27ஆம் தேதி பழனியில் குடமுழுக்கு நடந்தால் முதலமைச்சருக்கு ஆபத்து?

பழனி கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக பழனி கோயில் அர்ச்சகர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 21, 2022, 9:00 PM IST

’ஜனவரி 27ஆம் தேதி பழனியில் குடமுழுக்கு நடந்தால் முதலமைச்சருக்கு ஆபத்து?'

திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர்கள் குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கான பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இந்நிலையில் பழனி கோயில் மூலவர் சிலையான நவபாஷாண முருகன் சிலைக்கு மருந்து சாத்துவதில் அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அர்ச்சக ஸ்தானிக சங்கத்தலைவரும் பழனி கோயில் மூத்த அர்ச்சகருமான கும்பேஷ்வர குருக்கள் பழனி கோயில் அர்ச்சகர்களுக்கு வாட்ஸ்அப் ஆடியோ ஒன்று அனுப்பியுள்ளார். அதில் பழனி கோயில் சிலையை பலப்படுத்தாமல் கும்பாபிஷேகம் நடத்தச் சொல்வதாகவும், ஆனால் அதை மறுத்துள்ளதாகவும்‌ தெரிவித்துள்ளார்.

மேலும், ’இதுதொடர்பாக அர்ச்சகர்களிடம் திருக்கோயில் சார்பில் கையெழுத்து கேட்டால் யாரும் போடவேண்டாம். மீறி கையெழுத்து போட்டால் பிரச்னைகள் வந்தால் உதவிக்கு வரமுடியாது’ என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து அர்ச்சகர்கள் தரப்பில் தெரிவிப்பதாவது, ’பழனி கோயில் மூலவர் சிலையை பலப்படுத்துவதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், கோயில் கும்பாபிஷேகத்திற்கான நாள் மிகவும் குறைவாக இருப்பதால் கோயில் கருவறை மற்றும் நவபாஷாண மூலவர் சிலையை பலப்படுத்தும் பணிகளை சரியாக முடிக்க முடியாது. எனவே கும்பாபிஷேகத்தை அவசர கதியில் நடத்தவேண்டாம்’ என அர்ச்சகர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

முதலமைச்சருக்கு கேடு?: அதை அதிகாரிகள்‌ மற்றும் அறங்காவலர்கள் ஒத்துக்கொள்ள மறுப்பதால் சக அர்ச்சகர்களை எச்சரிக்கும் விதமாக தலைமை குருக்கள் இந்த ஆடியோவினை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான ஜனவரி 27ஆம் தேதி அன்று பூரம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் என்பதால் பூரம் நட்சத்திரத்தை கொண்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேடு தரும் எனத் தெரிவிக்கின்றனர்.

மேலும், நாட்டின் மன்னனின் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் ஏற்படும் நாளன்று எவ்வித அரசு சார்பிலும் எவ்வித காரியங்களையும் நடத்தக்கூடாது என்பது விதி என்றும், அவ்வாறு விதிமீறி நடந்தால் மன்னனுக்கு கேடாக முடியும் என்பது விதி என்றும், எனவே‌ குறிப்பிட்ட அந்த நாளில் கும்பாபிஷேகம் நடந்தால் நாட்டு மன்னர் என்ற முறையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடு ஏற்படும் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக பழனி அர்ச்சகஸ்தானிய சங்கத் தலைவர் கும்பேஸ்வர குருக்களிடம் கேட்டபோது, “பழனி முருகன் நவபாஷாண சிலைக்கு மருந்து சாத்த வேண்டாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மருந்து சாத்தாமல் கும்பாபிஷேகத்தை நடத்துமாறு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது ஆகம விதிகளை மீறிய செயல். அவ்வாறு செய்தால் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் நாட்டிற்கும் ஆபத்து ஏற்படும். இதற்கு முன்னதாக இதுபோன்ற செயல்களால் ஏற்பட்டுள்ள விபரீதங்களை மறந்துவிடக்கூடாது.

மேலும், மூலவரின் பாதுகாப்பு முக்கியமானது. ஏற்கெனவே மூலவர் சிலைக்கு செய்துவந்த ஆறுகால அபிஷேகங்களும் எம்ஜிஆர் காலத்தில் நிறுத்தப்பட்டது. எனவே, இதுபோன்ற ஒவ்வொன்றையும் நிறுத்தினால் மூலவர் சிலை பலமில்லாமல் போகும். மருந்து சாத்தாமல் அவசரப்பட்டு கும்பாபிஷேகம் செய்தால் நாடு சுபிட்சமின்றி போகும்” என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோயில்களை கண்காணிக்கப் பறக்கும் படை - அமைச்சர் சேகர்பாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.