திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே கருக்காம்பட்டி சாலையில் மருதமுத்து என்பவர் குடிபோதையில் ஆட்டோவை இயக்கியதில் விபத்தில் சிக்கினார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த ஆடியநல்லூரை சேர்ந்த ஜோசப் தர்மராஜ் (44) என்பவர் ஆட்டோ மீது மோதி விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்தில் ஜோசப் தர்மராஜ்-க்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவருக்கு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வேடசந்தூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கஞ்சா விற்பனை: பெண் உள்பட 3 பேர் கைது