திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி பஞ்சாயத்திற்குள்பட்ட பேத்துப்பாறை வயல் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன.
இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வேளாண்மையே பிரதான தொழிலாக இருந்துவருகிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளை தலைசுமையாகவே அரசின் பொதுப்பாதை வழியாகக் கொண்டுசென்று விற்பனையில் ஈடுபடுவர்.
ஆனால், அந்தப் பாதையைத் தனியார் சிலர் ஆக்கிரமித்து அப்பகுதி வழியே பொதுமக்கள் செல்ல முடியாமல் மறித்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
தொடர்ந்து, அரசின் நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்துவருவதைத் தடுக்க பேத்துப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களும், பாரதிய கிசான் சங்கத்தினரும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் - தமிழிசை