திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் மிகப்பெரிய வணிகம் நிறைந்த பகுதியாகும். இங்கு நாள்தோறும் பல ஆயிரம் மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் வாடகை கார்,வேன்,ஆம்புலன்ஸ்,ஆட்டோ,கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கொன இடவசதி இல்லாததால் ஒட்டன்சத்திரம் போருந்து நிலையம், காய்கறி மார்க்கெட் அருகில் வாகனங்களை நிறுத்துவிட்டு செல்கின்றனர்.
இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு, பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுவதும் அதை காவல் துறையினர் சென்று அகற்றுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. அதேபோல் நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை சார்பில் பலமுறை ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதும், இவர்கள் வானங்களை நிறுத்துவதுமாக இருந்து வந்தது. வாகனங்கள் நிறுத்துமிடத்தை முறைப்படுத்த கோரி வாடகை வாகனங்கள் உரிமையாளர் மற்றும் ஓட்டுனர்கள் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நகராட்சி ஆணையர் தேவிகா தலைமையில் வாடகை வாகனங்கள் நிறுத்துமிடத்தை முறைப்படுத்துதல் குறித்த முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து அலுவலர்கள், காவல் துறையினர், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். வாகன ஓட்டிகள் விரைவில் வாகனங்கள் நிறுத்துமிடத்தை முறைப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.