திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு படிவழி மற்றும் வின்ச் பாதைக்கு மாற்றாக, கடந்த 2004ஆம் ஆண்டு ரோப்கார் திட்டம் கொண்டு வரப்பட்டது. இரண்டு நிமிடங்களில் மலை உச்சிக்கு செல்லும் இந்த திட்டம் பக்தர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஒரு வழித்தடத்தில் நான்கு பெட்டிகள் வீதம் இருபுறமும் மொத்தம் எட்டு பெட்டிகள் இயக்கப்படுகின்றன. ஒரு பெட்டிக்கு நான்கு பேர் விதம் ஒருமுறைக்கு 16 பேர் மேலே செல்லவும், மேலே இருந்து 13 பேர் கீழே இறங்கவும் முடியும்.
இந்நிலையில் ரோப்காரில் பழைய பெட்டிகள் மாற்றப்பட்டு தற்போது புதிய பெட்டிகள் வரவழைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சிவப்பு, ஆரஞ்சு, ஊதா என கண்ணைக் கவரும் வகையில் ரோப் கார் தற்போது இயக்கப்படுவதால், ரோப்காரில் பயணம் செய்ய பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்; வெறிச்சோடிய திண்டுக்கல் காய்கறி சந்தை