ETV Bharat / state

திண்டுக்கல்லில் புதிய மருத்துவக்கல்லூரி: மார்ச் 15ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா - திண்டுக்கல் புதிய மருத்துவக்கல்லூரி

திண்டுக்கல்: புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ முகாமில் பேசிய அமைச்சர் சீனிவாசன்

author img

By

Published : Feb 28, 2020, 7:18 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளையொட்டி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கிவைத்தார்.

திண்டுக்கல்லில் சிறப்பு மருத்துவ முகாம்

இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் பேசுகையில், ”தமிழ்நாடு முழுவதும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 720 சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார். அதனடிப்படையில், ஏற்பாடு செய்யப்பட்டதே இன்றைய சிறப்பு முகாம். இதன் மூலம் பொதுமக்கள் தங்களைப் பரிசோதிக்கலாம். மருத்துவரின் ஆலோசனைகளை இலவசமாகப் பெறலாம்.

குறிப்பாக, நோய்க்கு ஏற்ப சிறப்பு சிகிச்சையும் வழங்கப்படும். இந்த சிறப்பு முகாமின் மூலம் அனைத்து தரப்பு மக்களும் ஒரே இடத்தில் இலவசமாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளலாம். இந்த மருத்துவ முகாமைப் பயன்படுத்திக்கொண்டு, அனைத்து பொதுமக்களும் பயன்பெற வேண்டும். மருத்துவத் துறையில் தமிழ்நாடுதான் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. சென்னை போன்ற நகரங்களுக்கு வெளிநாடுகளிலிருந்துகூட சிகிச்சைக்காக வருகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு அடுத்து தமிழ்நாடு சிறந்த மருத்துவ வசதியளிக்கும் மாநிலமாகத் திகழ்கிறது” என்றார்

தொடர்ந்து பேசிய அவர், “திண்டுக்கல் மாவட்டத்தில் புதியதாக மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனைக் கட்டப்பட உள்ளது. இந்த கல்லூரியின் கட்டமைப்பு பணியை தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி நேரில் வந்து, அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கவுள்ளார். வரும் மார்ச் 15ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறுவதற்கானப் பணிகளை மேற்கொண்டுவருகிறோம்” என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி முதலமைச்சர் மற்றும் தனி அலுவலர் விஜயகுமார், துணை இயக்குனர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: பிரைய‌ண்ட் பூங்காவில் ம‌ல‌ர் நாற்றுக‌ள் வாங்க சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் ஆர்வம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.