திண்டுக்கல்: வேடசந்தூர் வட்டம் பூத்தாம்பட்டி அருகே, நேற்று(செப்.25) இரவு 12 மணியளவில் பூட்டி இருக்கும் வீட்டை கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையன், தன் செல்போனில் டார்ச் லைட் அடித்து அக்கம் பக்க வீடுகளில் யாரும் இருக்கிறார்களா என்று நோட்டமிட்டுள்ளார்.
இந்த நேரத்தில், உஷாரான வீட்டின் உரிமையாளர் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் வீட்டிலிருந்து வெளியே வந்ததால் கொள்ளையன் தப்பி ஓடியுள்ளான். ஏற்கனவே, கடந்த (செப்.20) ஆம் தேதி அன்று வேடசந்தூர் பெரிய கடை வீதியில், ஐந்து கடைகளில் பூட்டை உடைத்து, அதில் இரண்டு கடைகளில் பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் அரங்கேறியது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து திருட முயற்சி செய்தவனை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்...