ETV Bharat / state

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை கவரும் ’திருப்பதி பிரம்மோற்சவ’ கொலு - navaratri golu festival in kodaikkanal

திண்டுக்கல்: தனியார் நட்சத்திர ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ள ’திருப்பதி பிரம்மோற்சவ' கொலு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

golu festival in kodaikkanal
golu festival in kodaikkanal
author img

By

Published : Oct 24, 2020, 6:49 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நவராத்திரியை முன்னிட்டு தனியார் ஹோட்டல் வளாகத்தில் விதவிதமான கடவுளின் உருவங்களைக் கொண்டு ’திருப்பதி பிரம்மோற்சவ' கொலு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலுவில் புத்தர், ஏசு, கிருஷ்ணபரமாத்மாவின் 10 அவதாரங்கள், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் பொற்றாமரை, சங்கீத மும்மூர்த்திகள், சீரடி சாய்பாபா, மீனாட்சி திருகல்யாணம், துர்கை அம்மன், ராமர் பட்டாபிசேகம், காவிரி உருவான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் உள்ளிட்ட கடவுள்களின் உருவங்களும், காந்தி, அப்துல் கலாம் போன்ற தலைவர்களின் உரும பொம்மைகளும் வைக்கப்பட்டுள்ளன.

கொலுவை ரசித்த சுற்றுலாப் பயணி ஒருவர், ”வீடுகளில் யாரும் இப்போதெல்லாம் மெனக்கெட்டு கொலு வைப்பதில்லை. கோயில்களில் தான் காணமுடிகிறது. கரோனா காலத்தில் ஏற்பட்ட மனச்சோர்வை போக்கச் சுற்றுலா வந்தோம். இந்தக் கொலு மனதுக்கு நெருக்கமாக உள்ளது” என்றார்.

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை கவரும் கொலு

இந்தக் கொலு ஒரு நாள் இரவில் ஹோட்டலில் வேலை செய்யும் ஊழியர்களால் அமைக்கப்பட்டது என ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்தார். இந்தக் கொலுவை ஹோட்டலில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வெகுவாக ரசித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: இயற்கையை நேசிக்கும் விதமாக கொலு அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய குடும்பம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.