திண்டுக்கல்: நத்தம் காமராஜ்நகர் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான காளை உடல்நலக்குறைவால் நேற்று (ஆகஸ்ட் 7) உயிரிழந்தது. கோயில் கலையரங்கத்தில் இன்று (ஆகஸ்ட் 8) வைக்கப்பட்டிருந்த காளையின் உடலுக்கு ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
பல பரிசுகள் வென்ற காலை
கோவிலின் அருகே மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் காளை அடக்கம் செய்யப்பட்டது.
அலங்காநல்லூர், பாலமேடு, அரளிப்பாறை, கொசவபட்டி, தவசிமடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியில் கலந்து கொண்ட காளை பல்வேறு பரிசுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாட்ஸ்அப்பில் வரும் தடுப்பூசி சான்றிதழ்... வழிமுறைகள் இதோ!