ETV Bharat / state

நல்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு : 600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நல்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு : 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

author img

By

Published : Mar 6, 2022, 5:57 PM IST

திண்டுக்கல்: நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டுப்போட்டி தொடங்கி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க திண்டுக்கல், அலங்காநல்லூர், பாலமேடு, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன.

300-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு

முன்னதாக ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகளைக் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து சான்றிதழ் அளித்த பின்னரே ஜல்லிக்கட்டில் பங்கேற்கக் காளைகள் அனுமதிக்கபட்டனர். அதேபோல் சீறி வரும் காளைகளை அடக்க 300-க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்கள் பங்கேற்றனர். இவர்களை அரசு மருத்துவர்கள் பரிசோதனை செய்து தகுதிச் சான்றிதழ் வழங்கபட்டப் பின்னரே களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக ஊர் சார்பில் கோயில் மாடு அவிழ்த்துவிடபட்டது. இதனைத் தொடர்ந்து மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடபட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடிவீரர்கள் திமிலைப் பிடித்து அடக்கினர். மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு வெள்ளிக்காசு, பணமுடிப்பு, சைக்கிள் , அண்டா, கட்டில், பீரோ, செல்போன், LED TV போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

அதேபோல் மாடுபிடிவீரர்களிடம் பிடிபடாத மாட்டு உரிமையாளருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நல்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு : 600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

இதையும் படிங்க:கடலூர் திமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.