ETV Bharat / state

பழனி தைப்பூச திருவிழா - பாரம்பரியம் மிக்க நகரத்தார் காவடிகள் வருகை - dindigul district palani

பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு நானுற்று ஐம்பது ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க நகரத்தார் காவடிகள் ரத்தின வேலுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

thaipoosam festival in palani
பாரம்பரியம் மிக்க நகரத்தார் காவடிகள் வருகை
author img

By

Published : Jan 20, 2022, 11:06 PM IST

திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா ஜன.12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பாரம்பரியம் மிக்க காரைக்குடியில் இருந்து நகரத்தார் சமூகத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகள் சுமந்தபடி பாதயாத்திரையாக வந்து பழனியில் குவிந்தனர்.

பாரம்பரியம் மிக்க நகரத்தார் காவடிகள் வருகை

நானூற்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பாதயாத்திரையாக வரும் நகரத்தார் காவடியில் ரத்தினக்கல் பதித்த மதிப்புமிக்க வேலுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்‌.

தைப்பூசத்தின் ஒன்பதாம் நாள் திருவிழாவின் போது சாமி தரிசனம் செய்யும் நகரத்தார் காவடிகள் தைப்பூசத் திருவிழாவின் கடைசி நாளான பத்தாம் நாள் அன்று தெப்பத் தேரை முடித்துவிட்டு பாதயாத்திரையாகவே காரைக்குடிக்கு திரும்பி செல்வார்கள்.

இதையும் படிங்க: செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர் நிலையில் கட்டப்பட்டுள்ளதா? - அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.