திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அன்ன சமுத்திர கண்மாய் அருகே தேசிய நான்கு வழிச் சாலையின் பாலத்தின் அருகே அடையாளம் தெரியாத இளைஞர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து அப்பகுதியினர் தகவல் தெரிவித்ததையடுத்து அம்மையநாயக்கனூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த உடலைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இது குறித்து அம்மையநாயக்கனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத இளைஞரின் உடல் எப்படி இந்த இடத்திற்கு வந்தது என்றும், அவர் எப்படி இறந்தார் என்றும் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ. 2000 நிவாரணம் - அரசாணை வெளியீடு