ETV Bharat / state

இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் அதிமுக - ஜோதிமணி கடும் தாக்கு

திண்டுக்கல்: அதிமுக அரசும், அதன் சட்டப்பேரவை உறுப்பினரும் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கவே ஆர்வம் காட்டிவருவதாக கரூர் எம்.பி. ஜோதிமணி குற்றம்சாட்டினார்.

author img

By

Published : Oct 19, 2020, 6:46 PM IST

jothimani
jothimani

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர். கோம்பை பகுதியில் சிட்கோ கட்டமைப்பதை எதிர்த்து கரூர் எம்.பி. ஜோதிமணி தொடர்ந்து போராடிவருகிறார். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுடன் சிட்கோ வனப்பகுதியில் அமைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியை சந்தித்து நேரில் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிட்கோ கட்டமைப்பதாகக் கூறி சீலக்கரடு பகுதியில் அமைந்துள்ள மலை வளத்தையும், மண் வளத்தையும் அழிப்பது எப்படி சரியாக இருக்க முடியும். உண்மையில் மரம் என்பது இயற்கை நமக்களித்த விலைமதிப்பற்ற பொக்கிஷம்.

இதன் மதிப்பு விவசாயிகளுக்கு தெரியும். அவர்களைப் பொறுத்தவரையில் உயர்ந்த மரம், தாழ்ந்த மரம் என்றெல்லாம் கிடையாது. மரம் என்றாலே அது உயர்வானதுதான்.

அதனால் தான் அவர்கள் மரங்களை அழிக்கக் கூடாது என பாடுபடுகிறார்கள். வேடசந்தூர் அதிமுக எம்எல்ஏ பரமசிவத்திற்கு உண்மையிலேயே தொகுதி மீது அக்கறை இருந்தால் இத்தனை வருடம் ஏன் இந்தத் திட்டத்தை செயல்படுத்தவில்லை. பதவிக் காலம் முடிவு பெறும் நேரத்தில் இதை அவசர அவசரமாக செய்ய வேண்டிய தேவை என்ன?

அதிமுகவை கடுமையாக சாடிய ஜோதிமணி

ஏனெனில் அதிமுகவிற்கும், எம்எல்ஏவுக்கும் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதே கொள்கையாக உள்ளது. வேடசந்தூர் எம்எல்ஏ அவரது தொகுதிக்குள்பட்ட வடமதுரை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏன் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. பெற்ற மகளை இழந்து தவித்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உறுதுணையாக ஏன் நிற்கவில்லை" எனக் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: மாணவர் ஜீவித் குமார் வீடியோவால் புதிய சர்ச்சை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.