திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தாசரிபட்டி - கோம்பைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், ராஜகோபால் ஆகியோருக்குச் சொந்தமாக மாந்தோட்டம் உள்ளது.
இவர்களுக்குள் சொத்து பிரச்னை கடந்த சில மாதங்களாக இருந்துள்ளது. ராஜேந்திரன் மகன் அருண் என்பவர் கோவையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது கரோனா தொற்று காரணமாக சொந்த ஊருக்கு வந்து மாந்தோட்டத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, ராஜகோபால், ராஜேந்திரனுக்கு திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தடுக்கச் சென்ற அருண், அவரது தாய் ஆறுமுகத்தாய் ஆகிய இருவரை ராஜகோபால் என்பருடைய மகன் குமார் என்பவர் அரிவாளால் வெட்டியதில் தாய், மகன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்த இருவரை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சத்திரப்பட்டி காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.