ETV Bharat / state

'பல கோடி மக்களின் அமைச்சரே வருக...வருக' - ஆய்விற்கு வந்த உதயநிதியை வரவேற்ற மாணவி - வரவேற்ற பள்ளி மாணவி

திண்டுக்கல் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர் உதயநிதியை, பள்ளி மாணவி ஒருவர் கவிதை சொல்லி வரவேற்றார்.

ஆய்விற்கு வந்த உதயநிதியை வரவேற்ற மாணவி
ஆய்விற்கு வந்த உதயநிதியை வரவேற்ற மாணவி
author img

By

Published : Dec 23, 2022, 3:21 PM IST

ஆய்விற்கு வந்த உதயநிதியை வரவேற்ற மாணவி

திண்டுக்கல்: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு உணவு பரிமாறி குறைகளைக் கேட்டறிந்தார். பின்பு பள்ளியில் உள்ள குழந்தைகள் பயன்படுத்தும் கழிவறைகளுக்குச் சென்று சுகாதாரமாக உள்ளதா என்று ஆய்வு செய்து கல்வித்துறை அதிகாரிகளிடம் திட்டங்கள் பற்றி கேட்டறிந்தார். முன்னதாக அமைச்சர் உதயநிதி பள்ளிக்கு வரும்போது அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது மாணவி ஒருவர் ’பல கோடி மக்களின் அமைச்சராம், மக்களில் இளஞர்களில் ஒருவராம் உங்களை முக மகிழ்ச்சியோடு வருக வருக என வரவேற்கிறோம்’ என கவிதை போல் அமைச்சர் உதயநிதி குறித்து பேசி அவரை வரவேற்றார். பின்பு பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தினை ஆய்வு செய்தார். அங்கு விளையாட்டு வீராங்கனைகளுக்கான தங்கும் விடுதியினை ஆய்வு செய்து, அவர்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்தார். தொடர்ந்து விளையாட்டு வீராங்கனைகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: 'தை மாதத்திற்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றம் நிகழும்' ஆர்.எஸ்.பாரதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.