திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஊரடங்கு உத்தரவால் சுற்றுலா தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாகக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் பலரும் வருமானமின்றித் தவித்துவந்தனர்.
இந்நிலையில், அடைக்கப்பட்டிருந்த கொடைக்கானல் நகராட்சித் தரைக்கடைகளுக்கு வாடகை கட்ட வேண்டுமென நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதைக் கண்டித்து ஏரிச்சாலை, கலையரங்க கடை வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நகராட்சி அலுவலகம் எதிரே காந்தி சிலை முன்பு அறவழிப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது - 5 வாகனங்கள் மீட்பு!