ETV Bharat / state

ஜாமீனில் வெளிவந்த நபருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு - JAMIN

திண்டுக்கல்: சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த இளைஞரை, அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம், பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

attack
author img

By

Published : May 17, 2019, 10:55 PM IST

திண்டுக்கல் மாவட்டம், பழனி, பத்ரா தெருவை சேர்ந்தவர் இருளப்பன் (20). இவர் பழனியில் நடைபெற்ற பல்வேறு திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த மாதம் நிபந்தனை ஜாமீன் கிடைத்து சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

தினமும் பழனி நகர் காவல் நிலையித்தில் இருளப்பன் கையெழுத்திட்டு வருகிறார்.

ஜாமினில் வெளிவந்த நபருக்கு சரமாரி அறிவாள் வெட்டு

இந்நிலையில், இன்று காலை, வழக்கம் போல காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வீட்டிக்கு செல்லும்போது இருளப்பனை, அடையாளம் தெரியாத கும்பல், அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருளப்பனை தாக்கிவிட்டு தப்பியோடிய நபர்களை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் பழனி நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.

திண்டுக்கல். 
ஒட்டன்சத்திரம் &பழனி
ம.பூபதி     மே:17

பழனியில் திருட்டுவழக்கில் சிக்கி பிணையில் வெளியே வந்த வாலிபருக்கு சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பத்ரா தெருவை சேர்ந்தவர் இருளப்பன்(20). இவர் பழனியில் நடைபெற்ற பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்றும், செல்போன் திருட்டு வழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்ட இருளப்பன்  கடந்தமாதம் சிறையில் அடைக்கப்பட்டார். திருட்டு வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த இருளப்பன் கடந்த சில நாட்களாக தினமும் பழனி நகர் காவல்நிலைத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் இன்றுகாலை வழக்கம் போல காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு  வீட்டிற்கு செல்லும்போது இருளப்பனை மர்மநபர்கள் சிலர் கை மற்றும் கால்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த இருளப்பன் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வெட்டிவிட்டு  தப்பியோடியவர்களை தேடிவந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இருவர் பழனி நகர் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர். ஜாமீனில் வெள்யேவந்த நபரை சராமாரியாக அரிவாளால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.