ETV Bharat / state

'சாதிப் பெயரைக் கூறி திட்டினார்கள்' - குடும்பத்துடன் இளைஞர் தற்கொலை முயற்சி! - man attempts suicide with family due to caste discrimination

திண்டுக்கல்: சாதிப் பெயரைக் கூறி திட்டியதாக குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்ற நபரை காவல் துறையினர் தடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் சென்றனர்.

man-attempts-suicide-due-to-caste-discrimination

author img

By

Published : Jul 27, 2020, 10:28 PM IST

திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் அருகே உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர், முனியாண்டி. இவர் மதுரை சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் பணிபுரிந்து வரும் இடத்தில் தன்னை சாதிப் பெயர் கூறி திட்டுகின்றனர் என அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் அளித்துள்ளார். ஆனால், அது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

man-attempts-suicide-due-to-caste-discrimination
குடும்பத்துடன் நபர் தற்கொலை முயற்சி

இதையடுத்து முனியாண்டி, தனது மனைவி அழகு பாண்டி, மகன்கள் செல்லப்பாண்டி, ஜெயபால் ஆகியோருடன் இன்று (ஜூலை 27) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். பின்னர் குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

அங்கு பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களைத் தடுத்து மண்ணெண்ணெய் பாட்டிலைப் பறிமுதல் செய்தனர். உடனடியாக, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி, மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க...சாதிய வன்கொடுமை: சிறுவனை மலம் அள்ள வைத்த கொடூரம்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.