ETV Bharat / state

சொத்து தகராறு -தீக்குளிக்க முயன்ற இளைஞர்! - LANDISSUE

திண்டுக்கல் : நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவரிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயன்ற இளைஞர்
author img

By

Published : May 27, 2019, 1:41 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கவராயப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் உடையப்பன் அம்பலம். இவர், சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி பாண்டியம்மாள், அவரது மகன் ராமர் ஆகியோர் அவர்களுக்கு சொந்தமான பூர்வீக இடத்தில் வசித்துவந்துள்ளனர். இந்நிலையில், அவர்களது நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் முறைகேடாக ஆவணங்களை தயாரித்து பத்திரப்பதிவு செய்து அபகரித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

தீக்குளிக்க முயன்ற நபர்

இது குறித்து உடையப்பன் மகன் ராமர் காவல் துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், விரக்தியடைந்த ராமர், தனது தாயுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தி ராமரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சொத்து தகராறில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:திண்டுக்கல் 27.5.19

தங்களது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவரிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு.

Body:திண்டுக்கல் அருகே உள்ள கூவனூத்து புதூர் பஞ்சாயத்தை சேர்ந்த கவராயப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் உடையப்பன் அம்பலம். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி பாண்டியம்மாள் மற்றும் மகன் ஆகியோர் அவர்களுக்கு சொந்தமான பூர்வீக இடத்தில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களது நிலத்தை அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவர் முறைகேடான ஆவணங்களை தயாரித்து பத்திர பதிவு செய்து அபகரித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததன் காரணமாக தனது தாயுடன் ராமர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார் இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி வலுகட்டாயமாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.