திண்டுக்கல்: பழனி கொடைக்கானல் வனப்பகுதியில் சிறுத்தை, மான், காட்டெருமை, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய 60 கிலோமீட்டர் சாலையில் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு இரண்டாவது கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற சிறுத்தை ஒன்று வாகனத்தில் அடிபட்டு சிறுத்தை உயிரிழந்தது.
இது குறித்து தகவலறிந்த பழனி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையின் உடலை மீட்டனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தது ஒரு வயது உடைய பெண் சிறுத்தை எனவும், இரவு நேரத்தில் சாலையைக் கடக்கும்போது வாகனம் மோதி உயிர் இழந்ததும் வனத்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுத்தை மீது வாகனத்தை மோதியது யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு