ETV Bharat / state

ஸ்டேன் சாமிக்கு கொடைக்கானல் மக்கள் அஞ்சலி!

மறைந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சாமிக்கு கொடைக்கானல் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஸ்டேன் சாமிக்கு அஞ்சலி செலுத்திய கொடைக்கானல் மக்கள்  கொடைகானலில் ஸ்டேன் சாமிக்கு அஞ்சலி  ஸ்டேன் சாமி  ஸ்டேன் சாமிக்கு அஞ்சலி  திண்டுக்கல் கொடைக்கானல் செய்திகள்  திண்டுக்கல் செய்திகள்  stan swamy  dindigul news  dindigul latest news  dindigul kodaikanal stan swamy last respect  last respect for stan swamy  last respect for stan swamy in kodaikanal  ஸ்டேன் சாமி
ஸ்டேன் சாமிக்கு அஞ்சலி
author img

By

Published : Jul 26, 2021, 8:07 AM IST

திண்டுக்கல்: திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சாமி ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின மக்களுக்காக தொடர்ந்து போராடியவர். எல்கர் பரிஷத் வழக்கில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், ஒன்றிய அரசால் மும்பையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஸ்டேன் சாமி மருத்துவமனையில் கடந்த ஜூலை 5ஆம் தேதி உயிரிழந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதல்மைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை ஆலயத்தில் ஸ்டேன் சாமி உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஆலயங்களில் இவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று (ஜூலை 25) கொடைக்கானல் உகார்தே நகர் ஆரோக்கிய அன்னை ஆலயத்திலும், குழந்தை இயேசு ஆலயத்திலும் உகார் தேநகர் பங்குத் தந்தை பீட்டர் சகாயராஜ் தலைமையில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கு முன்னதாக சிறப்பு திருப்பலி பூஜை நடத்தப்பட்டு, தேசிய பாதுகாப்பு பற்றிய உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதையடுத்து ஒன்றிய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்தும், ஒன்றிய அரசால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் பதாகைகள் ஏந்தி கோஷம் எழுப்பினர்.

இதையும் படிங்க: ஆகஸ்ட் 15 விவசாயிகள் டிராக்டர் பேரணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.