திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் ரோஜா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு கொடைரோடு சந்தைக்கு அதிகாலை 5 மணி முதலே சுமார் 500 கிலோ பன்னீர் ரோஜா பூக்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். ஆனால், தற்போது விழாக்காலங்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் குறைந்துள்ளதால் பன்னீர் ரோஜா விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
தற்போது இந்தப்பூக்கள் ஐம்பது ரூபாய்க்கு விற்றால் மட்டுமே நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் எனவும்; தற்போது ஒரு பன்னீர் ரோஜா பூ கிலோ 20 முதல் பத்து ரூபாய் வரை விற்கப்படுவதால், விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கொடைரோடு சந்தையில் இருந்து மதுரை மற்றும் சிவகாசி உள்ளிட்டப் பகுதிகளுக்கு பன்னீர் ரோஜா கொள்முதல் செய்து அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். பன்னீர் ரோஜாக்களின்வரத்து அதிகரித்துள்ளதால் பூக்களின் விலை சரிவை சந்தித்தாலும் விழாக்கள் மற்றும் சில்லறை வணிகர்கள், திருமண நிகழ்ச்சிகள் குறைந்துள்ளதால் விலை குறைவு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். எடுப்பு கூலிக்கு கூட இந்த விலை கட்டுப்படி ஆகவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:கொடைக்கானலில் அழிவின் விளிம்பில் பேரிக்காய் விவசாயம்