திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான வட்டகானல் பகுதியில், இயற்கை அழகை காண்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை இஸ்ரேல் நாட்டினர் தொடர்ச்சியாக இங்கு வருவார்கள். தற்போது டிசம்பர் மாதம் தொடங்கியுள்ளதால் அவர்களின் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டினர் மற்றும் மதபோதகர் (கபாத்) உள்ளிட்டோர் மீது ஐ.எஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளிவந்தது. இதையடுத்து, அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கபாத், ‘வருடத்திற்கு ஒரு முறை வட்டகானல் பகுதிக்கு வருகிறோம். இங்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். இதில் யூதர்கள் அனைவரும் கலந்துகொள்வர். ஆனால் இந்தாண்டு நாங்கள் பிரார்த்தனை செய்யக்கூடிய இடத்தை நகராட்சி நிர்வாகம் சீல் வைத்துவிட்டது. இதனை திறந்துவிட்டால் தான் இந்தாண்டு பிரார்த்தனை நடத்தமுடியும்’ என்று கூறினார்.
இதையும் படிங்க: ஜெர்மனியில் யூதர்கள் தொப்பி அணிவதை தவிர்க்க வேண்டும்!