திண்டுக்கல் : கொடைக்கானலில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை (ஆக.29) மீண்டும் திறக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவி வந்தச் சூழலில் பொதுமக்கள் கூடுவதற்கு அரசு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து தொற்றின் எண்ணிக்கை குறைந்த சூழலில் பல்வேறு தளர்வுகளையும் அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வாரச் சந்தை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. தொடர்ந்து, கொடைக்கானல் மக்களுக்கு தங்கு தடையின்றி காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைத்திட அனுமதி பெற்ற வாகனங்களில் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.
நாளடைவில் காய்கறிகளின் விலை பல மடங்கு உயர்வு அடைந்ததை தொடர்ந்து மீண்டும் வார சந்தையை திறக்க வேண்டுமென பொதுமக்கள் கொடைக்கானல் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் வாரச் சந்தை கடந்த நான்கு மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. பொதுமக்கள் கரோனா விதிமுறைகளை பின்பற்றி காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை வாங்கி சென்றனர். மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு சுகாதார துறையினர் அபராதம் விதித்தனர்.
இதையும் படிங்க : பக்ரீத் பண்டிகை: 3 மணி நேரத்தில் 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை!